தாம்பரம் செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில் இயக்கம்

சென்னை: காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு விருத்தாசலம் திருச்சி வழியாக இயக்கப்படும். 

மேலும் தாம்பரம்- செங்கோட்டை ரயில் செப்.,15, 16, 18. 20, 21, 22, 23, 25, 27, 28, 29 ஆகியதேதிகளில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 8.05க்கு செங்கோட்டை வந்து சேரும்.

அதே போல் செங்கோட்டை-தாம்பரம் ரயில் 16, 17, 19, 21, 22, 23, 24, 26, 28, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செங்கோட்டையிலிருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30க்கு தாம்பரம் சென்றடையும்.

இதற்கான முன்பதிவு செப்.,14 காலை 8 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது.
 
Top