கடும் நிதி நெருக்கடி.. ஏர்செல் நிறுவனத்தை மூட வாய்ப்பு?
வீடியோ பார்க்க : https://youtu.be/Guei_oprxa0
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணையும் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, ஏர்செல் நிறுவனத்தை மூட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் 4ஜி சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில், சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்செல் நிறுவனத்திடம் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் புதியதாக 4ஜி அலைக்கற்றைகளை வாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
ஏர்செல் நிறுவனத்தின் கடன் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
8 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை ஒரு நிறுவனத்துக்கும் 40 ஆயிரம் டவர்களை வேறு நிறுவனத்துக்கும் விற்க ஏர்செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏர்செல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மிக விரைவில் வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறவும் வாய்ப்புள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!