முகநூலில் எங்கள் செய்திகளை  படிக்க க்ளிக் செய்யவும்.!
யூபிஐ செயலியைப் பற்றியும் அதன் பயன்களைப் பற்றியும் 
National Payments Corporation of India சுருக்கமாக (NPCI) எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டு ஸ்தாபனம் கடந்த ஆண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட கொடுப்பனவு இடைமுகம் (Unified Payment Interface - UPI) என்ற பணம் பரிமாற்ற சேவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

UPI செயலி என்றால் என்ன?
யூபிஐ என்பது செயலி என்பது வங்கி மூலமாக பரிமாற்றம் செய்யக் கூடிய ஒரு வசதியை நமக்கு தருகின்ற ஒரு செயலி ஆகும். 

UPI செயலி பயன்கள் என்ன? 
இதன் மூலமாக இரண்டு வங்கிகளுக்கு இடையில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி எளிதாக நாம் பண பரிமாற்றம் செய்யலாம். வங்கிக்கு செல்ல வேண்டியது இல்லை. வரிசையில் நிற்க வேண்டியது இல்லை. நேரம், காலம் பார்க்க வேண்டியதே இல்லை. 

வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் யூபிஐ செயலியின் வழியாக தனது வங்கி கணக்கில் இருந்து பிற வணிகர்களுக்கு ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இருவழியாகவும் கிரெடிட் கார்டு விவரங்கள், IFSC குறியீடு, இணையதள வங்கி சேவை போன்று எதுவுமே இல்லாமல் பண பரிவர்த்தனை செய்ய முடியும். 

எந்தெந்த வங்கிகளின் வாடிக்கையாளர் இதனை பயன்படுத்தும் வசதி உள்ளது? 
  1. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 
  2. ஐசிஐசிஐ பாங்க் 
  3. ஹெச்டிஎஃப்சி
  4. ஆந்திரா பேங்க்
  5. ஆக்ஸிஸ் பேங்க்
  6. பாங்க் ஆப் மஹாராஷ்டிரா
  7. கனரா பேங்க்
  8. கத்தோலிக் சிரியன் பேங்க்
  9. டிசிபி
  10. ஃபெடரல் பேங்க்
  11. கர்நாடகா பேங்க்
  12. பஞ்சாப் நேஷனல் பேங்க்
  13. சவுத் இண்டியன் பேங்க்
  14. யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியா
  15. யுசிஓ பேங்க்
  16. யூனியன் பேங்க் ஆப் இந்தியா
  17. விஜயா பேங்க்
  18. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்
  19. டிஜேஎஸ்பி
  20. ஐடிபிஐ பேங்க்
  21. ஐடிஎஃப்சி
  22. ஸ்டாண்டர்டு சார்ட்டெர்டு பேங்க்
  23. அலகாபாத் பேங்க்
  24. ஹெச் எஸ் பி சி
  25. பேங்க் ஆப் பரோடா
  26. கோடக் மகேந்திரா பேங்க்
இண்டஸ்ல்டு பேங்க் இந்த யூபிஐ செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி? 
மேற்கண்ட வங்கிகள் தங்களது யூபிஐ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்துள்ளன. 

யூபிஐ செயலியை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? 
ஒரு வங்கிக் கணக்கு மற்றும் ஒரு ஸ்மாா்ட்போன் வைத்திருக்க வேண்டும். 
பின்பு கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் யுபிஐ செயலியை ஸ்மாா்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 
யூபிஐ செயலிக்கான பயனர் குறியீட்டை நீங்கள் உருவாக்க வேண்டும் 
அதன்பிறகு யூபிஐ செயலியில் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும். 
பின் எம்பின் எனப்படும் தனி அடையாளக் குறி (mean the Personal Identification Number) உருவாக்க வேண்டும். 
இப்போது யூபிஐ செயலியை பயன்படுத்தி நாம் பரிவர்த்தனை செய்யலாம். 

யூபிஐ செயலி எவ்வளவு பாதுகாப்பானது? 
வாடிக்கையாளர் இமெயில் முகவரி போன்ற தங்கள் பயனர் குறியீட்டைத் தவிர வேறு எந்த முக்கிய தகவலையும் அளிக்காததால் இது மிகவும் பாதுகாப்பான ஒரு முறையே ஆகும். 

யூபிஐ செயலிவழியாக எந்த மாதிரியான பரிவர்த்தனைகளை செய்யலாம்? 
வணிகர்களுக்கு பணம் செலுத்துதல், பணம் அனுப்புதல், பில் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை நாம் இதன் மூலமாக செய்யலாம். 

இந்த பரிவர்த்தனைக்கு தொகை வரம்பு ஏதேனும் உள்ளதா? 
நீங்கள் இந்த செயலி மூலமாக ஒரு பரிவர்த்தனை செய்யும் போது அதிகபட்சமாக 1 லட்சம் வரை செய்யலாம். 
முகநூலில் எங்கள் செய்திகளை  படிக்க க்ளிக் செய்யவும்.!
பண பரிவர்த்தனை செயல்படுவது எப்படி? 
ஏதேனும் பொருள் வாங்கும் போது அல்லது ஏதேனும் சேவையை நீங்கள் பெறும் போது, அந்த வணிகர்களின் பயனர் குறியீட்டை அவர்களிடமிருந்து பெற்று அதை உங்கள் யூபிஐ செயலியில் உள்ளிட்டு அதில் அவருக்கு செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட வேண்டும். பின்னர் பணத்தை செலுத்தவும் என்ற ஆப்சனைத் தேர்வு செய்து பரிவத்தனைக்கான எம்-பின் குறியீட்டை உள்ளிட்டு பணத்தை மிகவும் எளிமையாக செலுத்தலாம்.
 
Top